மேல்மருவத்தூர் தேசிய அளவிலான அம்மா டிராபி மாற்றுத்திறனாளிக்கான மாபெரும் விளையாட்டுப்போட்டி

X
மேல்மருவத்தூர் தேசிய அளவிலான அம்மா டிராபி மாற்றுத்திறனாளிக்கான மாபெரும் விளையாட்டுப்போட்டி வெற்றி பெற்ற அணிக்கு ஒரு லட்ச ரூபாய் ஊக்கத்தொகை மற்றும் பரிசு பொருட்கள் செங்கல்பட்டு மாவட்டம்,மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி மருத்துவக் கல்லூரி சார்பில் தேசிய அளவில் அம்மா ட்ராபி 2025 மாற்றுத்திறனாளிகளுக்கான வீல்சேர் கிரிக்கெட் போட்டிகள் இரண்டு தினங்கள் நடைபெற்றது. இந்த கிரிக்கெட் போட்டியில் இந்தியா ஏ.பி.சி என்ற மூன்று அணிகள் பங்கேற்றனர்.இறுதி போட்டியில் இந்தியா பி டீம் மற்றும் இந்தியா சி டீம் மோதியதில் இந்திய சி டீம் வெற்றி பெற்றது முதல் இடத்தை பிடித்தது. இந்திய பி டீம் இரண்டாம் இடத்தை பிடித்தது. அவர்களுக்கு மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி அறநிலையத்துறை துணைத் தலைவர் கோ.பா. அன்பழகன் அவர்கள் தலைமையில் சிறப்பு அழைப்பாளராக மாவட்ட காவல் துணை கண்காணிப்பாளர் மேகலை, தொழிலதிபர் அப்துல்நபில், மற்றும் தமிழ்நாடு வீல் சேர் கிரிக்கெட் சங்கத் தலைவர் துரைநம்பிபாண்டியன் ஆகியோர் கலந்து கொண்டு வெற்றி பெற்ற கிரிக்கெட் வீரர்களுக்கு வெற்றி கோப்பை மற்றும் சான்றிதழ் மற்றும் முதல் பரிசாக ரூபாய் ஒரு லட்சமும், இரண்டாவது பரிசாக 50,000 வழங்கினர். இந்த நிகழ்ச்சியில் ஏராளமான கல்லூரி மாணவர்கள் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
Next Story

