நெமிலி:பொக்லைன் எந்திரத்தை சிறைபிடித்து கிராம மக்கள்

X
ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி பேரூராட்சியில் சேகரிக்கப் படும் பிளாஸ்டிக் குப்பைகளை கொசஸ்தலை ஆற்றின் கரையோரம் கொட்டுகிறார்கள். இதற்கு அந்தப் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். தற்போது பெய்து வரும் மழையால் கொசஸ்தலை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. ஆற்றின் கரையோரம் கொட்டி வைத்திருந்த பிளாஸ்டிக் குப்பைகளை பேரூராட்சி அலுவலர்கள் நேற்று மாலை திடீரென பொக்லைன் எந்திரம் மூலம் ஆற்றில் ஓடும் தண்ணீரில் வீசி எறிந்து கொண்டு இருந்தனர். அந்த ஆற்றில் வீசப்பட்ட பிளாஸ்டிக் குப்பைகள் நீரில் அடித்து சென்று நெமிலியை அடுத்த கீழ்வெங்கடாபுரம் பகுதியில் உள்ள நீர்நிலைகளில் படிந்தது. விவசாய நிலங்களில் போடப் பட்டுள்ள போர்வெல்களில் பிளாஸ்டிக் குப்பைகள் அடைத்துள்ளது. இதை கண்டு ஆவேசமடைந்த அப்பகுதியை சேர்ந்த கிராம மக்கள் ஊராட்சி மன்ற தலைவர் அம்மு தலைமையில் திரண்டு வந்து கொசஸ்தலை ஆற்றின் அருகே சென்று அங்கு பிளாஸ் டிக் குப்பைகளை ஆற்றில் வீசி எறிந்து கொண்டிருந்த பொக்லைன் எந்திரத்தை சிறைபிடித்தனர். அப்போது அங்கிருந்த பேரூராட்சி துப்புரவு அலுவலர் அசோ கன் உள்ளிட்டோரிடம் கிராம மக்கள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பிளாஸ்டிக் குப்பைகளை கொசஸ்தலை ஆற்றின் கரையோரம் கொட்டினால் கிராம மக்களை திரட்டி வந்து நெமிலி பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவோம் என எச்சரிக்கை விடுத்தனர்.
Next Story

