ராணிப்பேட்டையில் வாலிபர் போக்சோவில் கைது

X
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி தாலுகா கிட்டன் குடிசை கிராமத்தை சேர்ந்தவர் கார்த்திக் (வயது 22). இவர், ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா பகுதியில் உள்ள தனது உறவினர் வீட்டில் தங்கி கல் அறுக்கும் வேலை செய்து வந்தார். அப் போது, 12 வயது சிறுமியை காதலிப்பதாக ஆசைவார்த்தை கூறி, உல்லாசமாக இருந்ததாக தெரிகிறது. இதனால் சிறுமி 3 மாதம் கர்ப்பம் அடைந்தாள். இதுதொடர்பாக சிறுமியின் பெற்றோர் ராணிப்பேட்டை அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து, கார்த்திக்கை கைது செய்தனர்.
Next Story

