கே.எஸ்.ஆர் மகளிர் கல்லூரி மாணவி இந்திய அணிக்குத் தேர்வு செய்யப்பட்டார்

கே.எஸ்.ஆர் மகளிர் கல்லூரி மாணவி   இந்திய அணிக்குத் தேர்வு செய்யப்பட்டார்
X
கே.எஸ்.ஆர் மகளிர் கல்லூரி மாணவி இந்திய அணிக்குத் தேர்வு செய்யப்பட்டார்
கே.எஸ்.ஆர் கலை மற்றும் அறிவியல் மகளிர் கல்லூரியிலிருந்து ச.மகாவித்யா இளங்கலை இரண்டாம் ஆண்டு வணிகவியல் கணினி பயன்பாடுத் துறையை சார்ந்த மாணவி சேலம் மாவட்டத்தில் நடைபெற்ற மாவட்ட அளவிலான மேசைப்பந்து விளையாட்டுப் போட்டியில் இரண்டாம் இடம் பெற்றார். மேலும், மஹாராஷ்ட்ரா மாநிலம் நாசிக்கில் நடைபெற்ற மாநில அளவிலான போட்டியில் இரண்டாம் இடம் பெற்று, இந்திய அணிக்குத் தேர்வு செய்யப்பட்டு மஹாராஷ்ட்ரா மாநிலத்தில் பயிற்சி எடுத்து வருகிறார். அக்டோபர் மாதம் (22.10.2025 – 31.10.2025) மஹாராஷ்ட்ரா மாநிலம் பெகரின் என்ற இடத்தில் நடைபெறும் போட்டியில் கலந்து கொள்ள உள்ளார் என்பதை கே.எஸ்.ஆர் மகளிர் கல்லூரியின் சார்பாக மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறோம். கே.எஸ்.ஆர் கல்வி குழுமத்தின் தாளாளர் திரு. ஆர்.சீனிவாசன் அவர்கள், துணைத்தாளாளர் திரு.ஆர்.சச்சின் அவர்கள் மற்றும் மகளிர் கல்லூரியின் முதல்வர் முனைவர் மா.கார்த்திகேயன் அவர்கள் மற்றும் துறைத்தலைவர்கள், பேராசிரியர்கள், உடற்கல்வி இயக்குநர் செ. முத்துக்கண்ணன், உடற்கல்வி ஆசிரியர் ச.பார்கவி ஆகியோர் மாணவியைப் பாரட்டினார்கள்
Next Story