வீடியோ போட்டோ கலைஞர்களின் கிரிக்கெட் போட்டி
திருச்செங்கோடு வட்டார வீடியோ மற்றும் போட்டோ கலைஞர்கள் நலச் சங்கத்தின் சார்பில் சங்க உறுப்பினர்களுக்கான முதலாம் ஆண்டு கிரிக்கெட் போட்டி ரிக்ஷா பள்ளி விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது. போட்டிகளை போட்டோ வீடியோ கிராபர்ஸ் முன்னாள் தலைவர் மாதேஸ்வரன்,மாவட்ட சங்க தலைவர் கண்ணன் செயலாளர் ஜெகநாதன் பொருளாளர் பொன்னுசாமி, பிஆர்ஓ மோகன்ராஜ், இணை செயலாளர் தேவேந்திரன் ஆகியோர் தலைமை தாங்கினார்கள், போட்டியினை பி ஆர் டி நிறுவனங்களின் வேளாண்மை இயக்குனர் பரந்தாமன், நவீன் குமார் வேலா ஸ்டில்ஸ், ஹரி நிவாஸ் ராஜசேகரன் விருச்சா பள்ளி தாளாளர், பாஷா பாஷா ஸ்டுடியோ ஆகியோர் துவக்கி வைத்தனர். போட்டியில் எட்டுக்கும் மேற்பட்ட அணிகள் கலந்து கொண்டனர். வெற்றி பெற்ற அணிகளுக்கு சீனிவாசன் எஸ் எஸ் கலர் லேப் & ஸ்டுடியோ, மாவட்ட பொருளாளர் பொன்னுசாமி, வட்டாரத் தலைவர் இதயத்துல்லா, செயலாளர் ஜெயக்குமார், பொருளாளர் ஜோதிபாசு, துணைத் தலைவர் அன்பானந்தன், துணை செயலாளர் பூபதி,பிஆர்ஓ மூர்த்தி, செயற்குழு உறுப்பினர்கள் ஜெகன் விஜயகுமார் கோகுல்ராஜ் சரவணன், ராமச்சந்திரன் ஆகியோர் பரிசுகள் வழங்கினார்கள்
Next Story




