தூத்துக்குடி மாநகராட்சியில் புதிதாக பணி நியமனம் : மேயர் வாழ்த்து

தூத்துக்குடி மாநகராட்சியில் புதிதாக பணி நியமனம் : மேயர்  வாழ்த்து
X
தூத்துக்குடி மாநகராட்சியில் புதிதாக பணி நியமனம் : மேயர் ஜெகன் பெரியசாமி வாழ்த்து
தூத்துக்குடி மாநகராட்சியில் புதிதாக பணி நியமனம் செய்யப்பட்டவர்கள் மேயர் ஜெகன் பெரியசாமியை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர். தூத்துக்குடி மாநகராட்சியில், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பாக உதவிப் பொறியாளர்கள், நகரமைப்பு அலுவலர்கள், இளநிலை பொறியாளர்கள், துப்புரவு ஆய்வாளர்கள் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்பட்டு புதியதாக பணியில் சேர்ந்துள்ளவர்கள் மாநகராட்சி மத்திய அலுவலகத்தில் மேயர் ஜெகன் பெரியசாமியை சந்தித்து வாழ்த்து பெற்றனர். அப்போது, இந்த புதிய பணியானது மகிழ்ச்சியையும், வெற்றியையும் மட்டுமல்ல கடின உழைப்புக்கும், திறமைக்கும் கிடைத்த அங்கீகாரம் இந்த வாய்ப்பை பயன்படுத்தி இன்னும் பல உயரங்களை அடைய வேண்டும் என்று மேயர் வாழ்த்து தெரிவித்தார்.
Next Story