சூலூர் காவல் நிலையத்தில் வைரமுத்து மீது புகார் – குண்டர் சட்டத்தின் கீழ் கைது கோரிக்கை

சூலூர் காவல் நிலையத்தில் வைரமுத்து மீது புகார் – குண்டர் சட்டத்தின் கீழ் கைது கோரிக்கை
X
ராமர் குறித்து அவதூறு பேச்சு – வைரமுத்து மீது விஷ்வ ஹிந்து பரிஷத் புகார்
சென்னையில் நடைபெற்ற கம்பன் விருது வழங்கும் விழாவில், கவிஞர் வைரமுத்து, அயோத்தியரின் அரசனாக விளங்கிய ராமரை புத்தி சுவாதீனம் இல்லாதவர் என குறிப்பிட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த பேச்சு இந்து மக்களின் உணர்வுகளை புண்படுத்துவதாகக் கூறி, தமிழ்நாடு விஷ்வ ஹிந்து பரிஷத் சார்பில் வழக்கறிஞர் விஜயகுமார் தலைமையில் இன்று (ஆகஸ்ட் 10) சூலூர் காவல் நிலையத்தில் புகார் மனு அளிக்கப்பட்டது. புகாருக்குப் பிறகு செய்தியாளர்களை சந்தித்த வழக்கறிஞர் விஜயகுமார், ராமர் குற்றம் செய்தவர்களை மட்டுமே தண்டித்தார். அவரை புத்தி சுவாதீனம் இல்லாதவர் என குறை கூறுவது இந்து மக்களிடையே கடும் எதிர்ப்பை உருவாக்கியுள்ளது. முன்பு ஆண்டாள் குறித்து வைரமுத்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியிருந்தாலும் இதுவரை எந்தச் சட்ட நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இப்போது மீண்டும் ராமர் குறித்து அவதூறாகப் பேசியுள்ளார். அவருக்கு உடனடி தண்டனை அளிக்க வேண்டும். இல்லையெனில் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும் எனக் கோரிக்கை வைத்தார்.
Next Story