ஆர்ப்பாட்டத்தின் போது வாக்காளர் பட்டியல் எரித்த காங்கிரஸ்

X
குமரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் சார்பில் மத்திய பாரதிய ஜனதா அரசை கண்டித்து குழித்துறையில் கண்ணில் கருப்பு துணி கட்டி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட காங்கிரஸ் தலைவர் டாக்டர் பினுலால்சிங் தலைமை வகித்தார். தாரகை கத்பட் எம்எல்ஏ முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினராக சட்டமன்ற காங்கிரஸ் கட்சி தலைவர் ராஜேஷ் குமார் எம் எல் ஏ கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அனைவரும் வாக்காளர் பட்டியல் நகலை தேசிய நெடுஞ்சாலையில் தீயிட்டு கொளுத்தினர். போலீசார் தீயை அணைத்தனர். போராட்டத்தில் ஏராளமான காங்கிரசார் கலந்து கொண்டனர்.
Next Story

