குமரி : முழு உடல் பரிசோதனை முகாம்

X
குமரி மாவட்ட மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறையின் சார்பில் திருவட்டார் வட்டத்துக்குட்பட்ட பொதுமக்களுக்கு நலம் காக்கும் ஸ்டாலின் – முழு உடல் மருத்துவ பரிசோதனை 2ம் கட்ட முகாம் சித்திரங்கோடு தனியார் பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. இந்த முகாமை மாவட்ட ஆட்சியர் அழகு மீனா பார்வையிட்டு, பொதுமக்களிடம் கலந்துரையாடினார். நடைபெற்ற முகாமில் மாலை 5.00 மணிவரை 1500 நபர்களுக்கு மேலானவர்கள், பரிசோதனைகள் மேற்கொண்டு, பயன்பெற்றனர். பத்மநாபபுரம் சார் ஆட்சியர் வினய்குமார் மீனா, குமரி அரசு மருத்துவ கல்லூரி முதல்வர் மரு.சுரேஷ் பாலன், மருத்துவ பணிகள் இணை இயக்குநர் மரு.சகாய ஸ்டிபன் ராஜ், மாவட்ட சுகாதார அலுவலர் மரு.அரவிந்த் ஜோதி உட்பட பலர் கலந்து கொண்டனர்.
Next Story

