ஆடி மாதம் வரும் பெளர்ணமியையொட்டி அக்னிசட்டி, கஞ்சிகளயம் ஊர்வலம்

X
பெரம்பலூர் மாவட்டம் கீழப்புலியூர் கிராமத்தில் அமைந்துள்ள ஆதிபராசக்தி கோயிலில் பெண்கள் ஒன்று சேர்ந்து ஆடி மாதம் வரும் பெளர்ணமியையொட்டி அக்னிசட்டி, கஞ்சிகளயம் எடுத்து ஊர்வலமாக ஊரை சுற்றி வந்து கோயிலை வந்தடைந்தனர். அதை தொடர்ந்து வன்ன மலர்களால் அலங்கரித்து மாலை அணிவித்து சிறப்பு பூஜைகளுடன் மஹா தீபாராதனைகளும் சிறப்பு பூஜைகள் செய்து ஆதிபராசக்திஅம்மனை பெண்கள் மற்றும் மகளிர் குழுவினர். மற்றும் பொதுமக்கள் வழிபட்டனர். ஆடி மாதம் பௌர்ணமியையொட்டி உலக நன்மைக்காகவும், பருவமழை தவறாமல் பெய்து, தன தானியம் பெருகிடவும், பொதுமக்கள் நோய் நொடி இல்லாமல் இருக்க பொதுமக்கள் பிரார்த்தனை செய்தனர்.கீழப்புலியூர் ஆதிபராசக்தி வழிபாட்டு குழுவினர் ஏற்பாடு செய்து இருந்தனர். உடன் பெரம்பலூர் மாவட்ட அம்மா பேரவை தலைவரும், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவருமான நடராஜன், ஆதிபராசக்தி வழிபாட்டு குழு நிர்வாகிகள் வாசுகி, பத்மா, ராசாத்தி, மீனா, இளஞ்சியம், கருசிலாமணி, மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
Next Story

