கோவையில் காசா மக்கள் போராட்டத்துக்கு எஸ்டிபிஐ கட்சியின் கவன ஈர்ப்பு மனித சங்கிலி நிகழ்வு !

X
காசா மக்கள் மீது தொடரும் போரால் ஏற்பட்ட பட்டினியை எதிர்த்து, எஸ்டிபிஐ கட்சியின் சார்பில் கோவை உக்கடம் பகுதியில் கவன ஈர்ப்பு மனித சங்கிலி நிகழ்வு நடைபெற்றது. பட்டினியால் கஷ்டத்தில் இருக்கும் காசா மக்களை காப்பாற்ற வலியுறுத்தி, பெண்கள், குழந்தைகள் உட்பட 300-க்கும் மேற்பட்டோர் நீண்ட மனித சங்கிலியாக நின்று எதிர்ப்புணர்ச்சி வெளிப்படுத்தினர். குழந்தைகள் காசா போரில் காயமடைந்தவர்களை ஒட்டி கை, கால்களில் கட்டுகள் போட்டு உணவுக்காக கையேந்தி நிற்கும் நிலையை பிரதிபலித்தனர். ஆண்கள் குழந்தைகளின் மாதிரி சடலங்களை ஏந்தி முழக்கங்கள் எழுப்பினர். நிகழ்வுக்கு மாவட்டத் தலைவர் முகமது இஷாக், மாவட்ட பொதுச் செயலாளர் சாகுல் ஹமீத், மாநில பொருளாளர் முஸ்தபா, மாநில வர்த்தக அணி செயலாளர் அப்துல் கரீம், தந்தை பெரியார் திராவிட கழக பொதுச்செயலாளர் கு.ராமகிருட்டிணன், மாநில பேச்சாளர் அபுதாஹிர், செய்தி தொடர்பாளர் மன்சூர் உள்ளிட்ட எஸ்டிபிஐ கட்சி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
Next Story

