கோவை: போதையில்லா தமிழகம் உலக சாதனை முயற்சி !
கோவை நீலாம்பூரில் உள்ள கதிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், முதல்வர் ஸ்டாலினின் போதை இல்லா தமிழகம் உருவாக்கும் இலக்கை முன்னிட்டு 1800 மாணவர்கள் கலந்துகொண்டு உலக சாதனை முயற்சியாக "DRUG-FREE TN CM" என்ற ஆங்கில எழுத்துருவை உருவாக்கினர். போதைப்பொருள் தடுப்பு அமைப்பின் சார்பில் நடத்தப்பட்ட இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில், மாணவர்கள் "போதையில்லா சமுதாயம் படைப்போம், சமூக நீதி காப்போம்" என்ற முழக்கத்துடன் கலந்து, போதை எதிர்ப்பு விழிப்புணர்வை ஊக்குவித்தனர். கதிர் கல்வி நிறுவனங்கள் தலைமை, கல்லூரி முதல்வர் மற்றும் தடுப்பு அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் உள்பட பலர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மாணவர்கள் போதைப்பொருள் எதிர்ப்பு பிரச்சாரத்தில் தங்கள் பங்களிப்பை வழங்குவதே அவசியம் என வலியுறுத்தினர்.
Next Story



