பணியின் போது சாலை விபத்தில் உயிரிழந்த லிங்கம் ஆட்டோமொபைல்ஸ் ஊழியரின் குடும்பத்திற்கு வாழ்நாள் ஓய்வூதியம்

பணியின் போது சாலை விபத்தில் உயிரிழந்த லிங்கம் ஆட்டோமொபைல்ஸ் ஊழியரின் குடும்பத்திற்கு வாழ்நாள் ஓய்வூதியம்
X
குடும்பத்திற்கு மாதம் ரூ. 5,159/-யை அவரை சார்ந்த குடும்பத்தினருக்கு உதவித் தொகையாக வழங்க, இஎஸ்ஐ சேலம் துணை மண்டல அலுவலகத்தின் இணை இயக்குனர் (பொறுப்பு), எஸ்.சிவராமகிருஷ்ணன் உத்தரவின் பேரில் ஆணை பிறப்பிக்கப்பட்டு,ஆகாஷ் பணிபுரிந்த
இஎஸ்ஐ காப்பீட்டாளர்களுக்கு, தொழில்சார் நோய் அல்லது வேலை காரணமாக இறப்பு நிகழும் போது, இறந்த காப்பீட்டாளரின் ஊதியத்தில் 90% சார்ந்தோர் உதவி தொகையாக இ.எஸ்.ஐ கழகத்தினால் இறந்தவரின் குடும்பத்தினருக்கு மாதந்தோறும் ஓய்வுதியம் வழங்கப்படுகிறது. அதனடிப்படையில், பெரம்பலூர் லிங்கம் ஆட்டோமொபைல்ஸ் நிறுவனச்சில் பணி செய்து வந்த ஆகாஷ் என்பவர் பணிநேரத்தின் போது நிகழ்ந்த சாலை விபத்தால் கடந்த 26.09.2024 உயிரிழந்தார்.இதனை தொடர்ந்து, அவரது குடும்பத்திற்கு மாதம் ரூ. 5,159/-யை அவரை சார்ந்த குடும்பத்தினருக்கு உதவித் தொகையாக வழங்க, இஎஸ்ஐ சேலம் துணை மண்டல அலுவலகத்தின் இணை இயக்குனர் (பொறுப்பு), எஸ்.சிவராமகிருஷ்ணன் உத்தரவின் பேரில் ஆணை பிறப்பிக்கப்பட்டு,ஆகாஷ் பணிபுரிந்த அலுவலக வளாகத்தில், திருச்சி இஎஸ்ஐ கிளை அலுவலக மேலாளர் எஸ். ரேவதி, இறந்தவரின் குடும்ப உறுப்பினர்களுக்கு, பெரம்பலூர் லிங்கம் ஆட்டோமொபைல்ஸ் நிறுவன உரிமையாளர் வரதராஜன் முன்னிலையில் வழங்கினர்.
Next Story