பூணூல் திருவிழா கத்தி போட்டவாறு அம்மனை அழைத்து வந்த பக்தர்கள்
Komarapalayam King 24x7 |10 Aug 2025 6:38 PM ISTபூணூல் திருவிழாவையொட்டி, கத்தி போட்டவாறு அம்மனை வீர குமாரர்கள் அழைத்து வந்தனர்.
ஆண்டுதோறும் ஆவணி அவிட்டம் நாளன்று குமாரபாளையம் தேவாங்கர் சமுதாய பெருமக்கள் இந்த பூணூல் திருவிழாவை கொண்டாடப்படுவது வழக்கம். சேலம் சாலை சவுண்டம்மன் கோவில் மற்றும் ராஜா வீதி சவுண்டம்மன் கோவில் ஆகிய இரு கோவில்களில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார ஆராதனைகள் நடத்தப்பட்டன. பக்தர்கள் பூணூல் அணிந்து அம்மனை வழிபட்டனர். வீர குமாரர்கள் விட்டலபுரி பாண்டுரங்கர் கோவிலிருந்து ஊர்வலமாக அம்மனை கத்தி போட்டவாறு சேலம் சாலை, கத்தாளபேட்டை, ராஜா வீதி, காளியம்மன் கோவில் உள்ளிட்ட பல பகுதிகள் வழியாக விழா பந்தலில் நிறைவு பெற்றது. வீரமுண்டி வேடமிட்ட நபர்கள், வீர குமாரர்களை எதிர்க்கும் விதமாக போர் புரிந்தது, காண்போரை பரவசமடைய செய்தது. வழி நெடுக பக்தர்கள் நின்று அம்மனை வழிபட்டனர். பக்தர்களுக்கு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டன.
Next Story


