விடுதலைக் களம் கட்சியின் பொதுக்குழு கூட்டம்..

விடுதலைக் களம்  கட்சியின் பொதுக்குழு கூட்டம்..
X
விடுதலைக் களம் கட்சியின் பொதுக்குழு கூட்டம்...
விடுதலைக் களம் கட்சியின் பொதுக்குழுக் கூட்டம் நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகேயுள்ள போடிநாயக்கன்பட்டி பகுதியில் நடைபெற்றது. கூட்டத்தில் கட்சியின் நிறுவனர் கொ.நாகராஜன் தலைமை வகித்தார். இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களாவன: 2026 ஜனவரி 4 மாவீரன் வீரபாண்டிய கட்டபொம்மன் பிறந்தநாள் விழா, விடுதலைக் களம் கட்சியின் வெள்ளி விழா, தொட்டிய நாயக்கர் சமுதாய மக்களின் அரசியல் எழுச்சி ஆகியவற்றைக் குறிக்கும் வகையில் மாநாட்டினை ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே நடத்துவது என்றும், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது கடந்த 2021 சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரத்தில், ‘டி.என்.டி. மற்றும் டி.என்.சி. ஆகிய இரட்டைச் சாதி சான்றிதழ் முறையை ஒழித்து ஒற்றைச் சான்றிதழ் வழங்கப்படும்’ என்று வாக்குறுதியளித்தார். இதன் மூலம் தொட்டிய நாயக்கர் சமுதாயம் உள்ளிட்ட 68 சமுதாயத்தினர் தங்களது பாதிப்புக்கு தீர்வு வரும் என்று காத்திருந்தனர். ஆனால், ஸ்டாலின் முதல்வராகி நான்கு வருடங்களுக்கு மேல் கடந்தும் இந்த வாக்குறுதியை இன்னமும் நிறைவேற்றவில்லை. எனவே முதல்வரின் வாக்குறுதிப்படி ஒற்றை சான்றிதழ் வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். தொட்டிய நாயக்கர் சமுதாயத்தினருக்கு எந்த அரசியல் பிரநிதித்துவம், சட்டமன்ற-நாடாளுமன்ற பிரநிதித்துவத்தை எந்த கட்சியும் இதுவரை வழங்கிடவில்லை. விடுதலைப் போரில் ஈடுபட்டு நாட்டுக்காக தங்கள் இன்னுயிரை ஈந்த மாவீரன் வீரபாண்டிய கட்டபொம்மன், விருப்பாச்சி கோபால நாயக்கர், தளி எத்தளப்ப நாயக்கர் போன்ற தியாகிகளை பெற்ற இந்த தொட்டிய நாயக்கர் சமுதாயத்துக்கு அரசியல் கட்சிகள் தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பினை வழங்கிட வேண்டும். மேட்டூர் அணை கடந்த ஜூன் மாத இறுதியில் இருந்து இப்போது வரை நான்கு முறை நிரம்பியிருக்கிறது. அந்த அளவுக்கு கர்நாடாக நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடும் மழை பொழிந்ததால் மேட்டூர் அணைக்கு அதிக அளவு தண்ணீர் வரத்து இருக்கிறது. ஆனால் இந்தத் தண்ணீரை உரிய வகையில் பயன்படுத்திட இயலாதமல் பெருமளவு கடலில் கலக்கும் அவலமே இன்னும் நீடிக்கிறது. கடந்த அதிமுக ஆட்சியில் முதலமைச்சராக எடப்பாடி பழனிசாமி இருந்தபோது மேட்டூர் அணை நிரம்பும் பட்சத்தில் அதிலிருந்து வெளியேறும் உபரி நீரை 100 வறண்ட ஏரிகளில் நிரப்பும் திட்டத்தைக் கொண்டுவந்தார். இந்தத் திடத்துக்கென அமைக்கப்பட்ட மோட்டார்களில் 2 தான் செயல்பட்டு வருகிறது என்று வரும் செய்திகள் அதிர்ச்சியளிக்கின்றன. அரசு உடனடியாக இதில் கவனம் செலுத்தி மேட்டூர் அணை நிரம்பும் பட்சத்தில் உபரி நீர் வீணாகாமல் ஏரிகளுக்கு செல்லும் திட்டத்தை தொய்வின்றி செயல்படுத்திட வேண்டும். நாட்டின் அடுத்த மக்கள்தொகை கணக்கெடுப்போடு சாதிவாரி கணக்கெடுப்பும் நடத்தப்படும் என்று பிரதமர் மோடி ஏற்கனவே அறிவித்தது வரவேற்கத் தக்க முடிவு. எனினும் அதற்காக காத்திருக்காமல் தமிழ்நாடு அரசு மாநில அரசின் அதிகாரத்தைப் பயன்படுத்தி தமிழ்நாட்டில் தனி சாதிவாரி சர்வே 2008-ஆம் ஆண்டின் புள்ளிவிவர சட்டத்தின்படி நடத்திட வேண்டும். ஏற்கனவே பிகார், தெலங்கானா, கர்நாடகா ஆகிய மாநிலங்களை பின்பற்றி தமிழ்நாட்டிலும் சாதி வாரி சர்வே நடத்திட வேண்டும் என்றும் விடுதலைக் களம் கட்சியின் பொதுக்குழு கூட்டம் அரசை வலியுறுத்துகிறது என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
Next Story