போக்சோவில் வாலிபர் கைது.

போக்சோவில் வாலிபர் கைது.
X
மதுரையில் சிறுமியை திருமணம் செய்த வாலிபர் போக்சோவில் கைது.
மதுரை பொன்மேனி 2-வது தெருவை சேர்ந்த கோபிநாத் (19) என்பவர் அந்த பகுதியில் உள்ள டீக் கடைக்கு அடிக்கடி செல்வது வழக்கம். அங்கு வேலை செய்து கொண்டிருந்த சிறுமியை காதலிப்பதாக கூறியுள்ளார். அந்த சிறுமியை பொன்மேனி முனியாண்டி கோவில் இரண்டாவது தெரு கிழக்கு தெருவில் உள்ள கோவில் ஒன்றில் வைத்து திருமணம் செய்து கொண்டார். பின்னர் அவரை பலாத்காரம் செய்துள்ளார். இந்த தகவல் திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றிய ஊர் நல அலுவலர் முத்து லெட்சுமிக்கு தெரிய வந்தது . இதைத்தொடர்ந்து அவர் மதுரை தெற்கு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் போக்சோ சட்டத்தில் பதிவு செய்து வாலிபர் கோபிநாத்தை கைது செய்தனர்.
Next Story