தஞ்சையில் சத்துணவு ஊழியர் சங்க மாவட்ட சிறப்பு பிரதிநிதித்துவ பேரவை

தஞ்சையில் சத்துணவு ஊழியர் சங்க மாவட்ட சிறப்பு பிரதிநிதித்துவ பேரவை
X
சத்துணவு ஊழியர் சங்கம்
தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்க, தஞ்சாவூர் மாவட்ட சிறப்பு பிரதிநிதித்துவ பேரவைக் கூட்டம், சனிக்கிழமையன்று தஞ்சையில், மாவட்ட துணைத் தலைவர் இராமாமிர்தம் தலைமையில் நடைபெற்றது. மாவட்டத் துணைத் தலைவர் கலா வரவேற்றார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் மணிமேகலை அஞ்சலி தீர்மானத்தை வாசித்தார்.  தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாநில துணைப்பொதுச் செயலாளர் ரெங்கசாமி பேரவையை துவக்கி வைத்துப் பேசினார். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாவட்ட தலைவர் செந்தில்குமார், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் முன்னாள் மாவட்ட பொருளாளர் பாஸ்கரன் ஆகியோர் வாழ்த்திப் பேசினார்.  தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தின் மாநிலப் பொருளாளர் சித்ரா, பொதுச் செயலாளர் ஜெசி ஆகியோர் சிறப்புரையாற்றினர்.  தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தின் மாநில தலைவர் செல்லதுரை நிறைவுரையாற்றினார்.  இந்த சிறப்பு மாவட்டப் பேரவையில் மாவட்ட தலைவராக ஜெ.பி.லதா, மாவட்டச் செயலாளராக ஏ.ஆர்.கவிதா, மாவட்டப் பொருளாளராக இராமாமிர்தம், மாவட்ட துணைத் தலைவர்களாக வாசுதேவன், திருச்செல்வம், மகாலட்சுமி, மதியழகன், மாவட்ட இணைச் செயலாளர்களாக நாவலரசன், சுமதி,  ஜாக்குலின் மேரி, செந்தாமரை, மாவட்டப் பொருளாளராக இராமாமிர்தம், மாநில செயற்குழு உறுப்பினராக கலா, மாவட்ட தணிக்கையாளராக கண்ணம்மாள் ஆகியோர் ஒரு மனதாக தேர்வு செய்யப்பட்டனர்.  இந்தப் பேரவையில், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் ரமேஷ், மாவட்ட பொருளாளர் ராதாகிருஷ்ணன், மாநில செயற்குழு உறுப்பினர் தம்பி ஐயா, தஞ்சை வடக்கு வட்டச் செயலாளர் அஜய்ராஜ் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். நிறைவாக, தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தின் மாவட்ட துணைத் தலைவர் வாசுதேவன் நன்றி கூறினார். கூட்டத்தில், "தமிழக முதல்வர் அவர்களின் தேர்தல் கால வாக்குறுதியின்படி, சத்துணவு ஊழியர்களின் 40 ஆண்டு கால கோரிக்கையான சத்துணவு ஊழியர்களுக்கு வரையறுக்கப்பட்ட ஊதியம் மற்றும் ஓய்வூதியம் வழங்க கோரி, வருகின்ற 28.08.2025 அன்று சென்னையில் நடைபெறும் கருப்பு உடை அணிந்து காத்திருப்பு போராட்டத்தில் அனைவரும் பங்கேற்பது" என்று முடிவு செய்யப்பட்டது.
Next Story