காரியாபட்டியில் முன்னாள் அமைச்சர் வைகைச்செல்வன் எழுதிய ஒரு நூற்றாண்டின் தவம் நூலின் அறிமுக விழா - கவிஞர்கள் ஏராளமானோர் பங்கேற்பு

காரியாபட்டியில் முன்னாள் அமைச்சர் வைகைச்செல்வன் எழுதிய ஒரு நூற்றாண்டின் தவம் நூலின் அறிமுக விழா - கவிஞர்கள் ஏராளமானோர் பங்கேற்பு
X
காரியாபட்டியில் முன்னாள் அமைச்சர் வைகைச்செல்வன் எழுதிய ஒரு நூற்றாண்டின் தவம் நூலின் அறிமுக விழா - கவிஞர்கள் ஏராளமானோர் பங்கேற்பு
காரியாபட்டியில் முன்னாள் அமைச்சர் வைகைச்செல்வன் எழுதிய ஒரு நூற்றாண்டின் தவம் நூலின் அறிமுக விழா - கவிஞர்கள் ஏராளமானோர் பங்கேற்பு அதிமுகவை சேர்ந்த முன்னாள் அமைச்சரான வைகைச்செல்வன். சிறந்த பேச்சாளர் இவர் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார். மேலும் எங்களது கட்டுரைகள் தினசரி நாளிதழ்களிலும், வானொலிகளிலும் பல்வேறு தலைப்புகளில் வெளியாகி வருகின்றன. இவற்றின் தொகுப்பு ஒரு நூலாக வடிவம் பெற்று "ஒரு நூற்றாண்டின் தவம்" என்ற தலைப்பில் நூல் வெளிவந்து அதனை கடந்த ஆகஸ்ட் - 7 ந்தேதி மும்பை தமிழ் சங்கத்தில் நடைபெற்ற விழாவில் மகாராஷ்டிரா ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் நூலினை வெளியிட்டார். இந்த நிலையில் "ஒரு நூற்றாண்டின் தவம்" புத்தகத்தின் அறிமுக விழா விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் பொற்கைப்பாண்டியன் கவிதா மண்டலம் சார்பில் நடைபெற்றது. இதில் நூலின் ஆசிரியர் முன்னாள் அமைச்சர் வைகைச்செல்வன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் கே.கே.சிவசாமி, ராஜவர்மன், சுப்பிரமணி, சரவணன், , மணிமேகலை, பொற்கைபாண்டியன் கவிதா மண்டலத்தின் தலைவர் பொற்கைபாண்டியன் ஆகியோர் கலந்து கொண்டு "ஒரு நூற்றாண்டின் தவம்" நூலினை அறிமுகம் செய்தனர். முன்னாள் அமைச்சர் வைகைச்செல்வன் எழுதிய இந்த "ஒரு நூற்றாண்டின் தவம்" நூல் போட்டித் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு அதிகம் பயன்படும் என்பதால் ஏராளமானோர் 5 முதல் 10 புத்தகங்களை வாங்கிச் சென்று அதில் நூலின் ஆசிரியர் வைகைச்செல்வனிடம் கையெழுத்து வாங்கி சென்றனர். இதில் மதுரை, விருதுநகர், சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த ஏராளமான கவிஞர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
Next Story