மனு கொடுக்க வந்த மூதாட்டியை சட்டமன்ற உறுப்பினர் தங்கபாண்டியன் மூதாட்டியை அலட்சியமாக பேசி மனு கொடுக்க விடாமல் மேடையில் இருந்து கீழே இறக்கி விட்டதால் அப்பகுதியில் கிராம மக்களிட

மனு கொடுக்க வந்த மூதாட்டியை சட்டமன்ற உறுப்பினர் தங்கபாண்டியன் மூதாட்டியை அலட்சியமாக பேசி மனு கொடுக்க விடாமல் மேடையில் இருந்து கீழே இறக்கி விட்டதால்  அப்பகுதியில் கிராம மக்களிட
X
மனு கொடுக்க வந்த மூதாட்டியை சட்டமன்ற உறுப்பினர் தங்கபாண்டியன் மூதாட்டியை அலட்சியமாக பேசி மனு கொடுக்க விடாமல் மேடையில் இருந்து கீழே இறக்கி விட்டதால் அப்பகுதியில் கிராம மக்களிடம் பரபரப்பு
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே சேத்தூர் பேரூராட்சி பகுதியில் அரசு விழாவுக்கு வந்த வருவாய்த்துறை அமைச்சரிடம் படிப்பு செலவுக்காக பேரனை அழைத்து வந்து மனு கொடுக்க வந்த மூதாட்டியை சட்டமன்ற உறுப்பினர் தங்கபாண்டியன் மூதாட்டியை அலட்சியமாக பேசி மனு கொடுக்க விடாமல் மேடையில் இருந்து கீழே இறக்கி விட்டதால் அப்பகுதியில் கிராம மக்களிடம் பரபரப்பு காணப்பட்டது. இதைக் கண்டு கொள்ளாத வருவாய்த்துறை அமைச்சர் மற்றும் மாவட்ட ஆட்சியர் தேநீர் அருந்து கொண்டிருந்தனர்.
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே சேத்தூர் பேரூராட்சி பகுதியில் 6 கோடி மதிப்பீட்டில் புதிதாக குளிர்சாதன வசதி உடன் திருமண மண்டபம் கட்டிடம் அமைப்பதற்காக அடிக்கல் நாட்டும் விழா நடைபெற்றது. அப்போது அதே விழா மேடையில் மாவட்ட ஆட்சியர் மற்றும் வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ். எஸ்.ஆர். ராமச்சந்திரன் இருவரும் தேநீர் அருந்தி கொண்டிருந்த பொழுது அதே பகுதியைச் சேர்ந்த மூதாட்டி தனது பேரன் அழைத்துக் கொண்டு படிப்பு செலவுக்காக மனு கொடுக்க மேடையில் ஏறும் போது ராஜபாளையம் சட்டமன்ற உறுப்பினர் தங்கபாண்டியன் அலட்சியமாக பேசி மூதாட்டி மற்றும் பேரனை கீழே இறக்கி விட்டதால் அப்பகுதி கிராம மக்களிடம் சலசலப்பு ஏற்படுத்தியது. பின்பு செய்தியாளர்கள் படம் பிடித்த போது உடனடியாக அமைச்சர் மூதாட்டியுடம் இருந்த மனுவை வாங்கி சட்டமன்ற உறுப்பினர் மனுவை கொடுத்துவிட்டு மூதாட்டியை அவரைப் பார்த்துக் கொள்ளுங்கள் என்று கூறிவிட்டார். அங்கிருந்து சென்றதால் கிராம பொதுமக்களிடம் பரபரப்பை ஏற்படுத்தியது.
Next Story