ஸ்ரீவில்லிபுத்தூரில் தலித் கிறிஸ்தவர்களைஅட்டவணைப் பட்டியலில் சேர்க்க வலியுறுத்திமத்தியஅரசைக்கண்டித்து கருப்புக்கொடி ஏற்றிகண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது....*

X
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் தலித் கிறிஸ்தவர்களைஅட்டவணைப் பட்டியலில் சேர்க்க வலியுறுத்திமத்தியஅரசைக்கண்டித்து கருப்புக்கொடி ஏற்றிகண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.... விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் திரு இருதய ஆண்டவர் ஆலய வளாகத்தில் தலித் கிறிஸ்தவர்களை அட்டவணைப் பட்டியலில் சேர்த்திட காலம் தாழ்த்தி வரும் மத்திய அரசைக் கண்டித்தும் நீதியரசர் ரங்கநாத் மிஸ்ரா ஆணையத்தின் பரிந்துரையை நடைமுறைப்படுத்தியும், கே.ஜி.பாலகிருஷ்ணன் ஆணையத்தை திரும்பபெற வலியுறுத்தியும் மத்திய அரசைக் கண்டித்து திரு இருதய ஆலயம் முன்பு கருப்புக்கொடி ஏற்றி வட்டார அதிபர் அருட்பணி சந்தனசகாயம் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் மத்திய அரசைக்கண்டித்து முழக்கங்கள் எழுப்பப்பட்டன. இந்த ஆர்ப்பாட்டத்தில் 250க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டு கருப்பு பட்டை அணிந்து மத்திய அரசை கண்டித்து கோசங்கள் எழுப்பினர்
Next Story

