தேன்கனிக்கோட்டை: டிரான்ஸ்பார்மரை உடைத்து தாமிர கம்பிகள் திருட்டு.

X
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அடுத்துள்ள தண்டரை கிராமத்தில் நேற்று முன்தினம் நள்ளிரவில் மர்ம நபர்கள் டிரான்ஸ்பார்மரில் அதில் இருந்த தாமிர கம்பிகள் (காப்பர் ஒயர்) மற்றும் ஆயிலை திருடி சென்றுள்ளனர். இதனால் இரவு முழுவதும் நள்ளிரவில் மின்சாரம் இல்லாததால் இது குறித்து அப்பகுதியினர் மின்சார வாரிய அதிகாரிகளுக்கு பொதுமக்க்ள் புகார் அளித்துள்ளனர். புகாரின் பேரில் அங்கு சென்று அதிகாரிகள் பார்த்தபோது டிரான்ஸ்பார்மர் உடைக்கப்பட்டு அதில் இருந்த தாமிர கம்பிகள் மற்றும் ஆயில் ஆகியவை திருடப்பட்டு இருந்தது தெரியவந்தது. இதுகுறித்து மின்வாரிய அதிகாரிகள் தேன்கனிக்கோட்டை காவல் நிலையத்தில் புகார் கொடுத்னர். அதன் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story

