சோளிங்கர் அருகே வீட்டு சுவர் இடிந்து ஒருவர் பலி

X
ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் அருகே சின்ன பரவத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ரவிச்சந்திரன் (54). இவர் ரேஷன் கடை ஊழியராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் நேற்று இரவு பெய்த கன மழையில் அவர் குடியிருந்த வீட்டின் சுவர் இடிந்து விழுந்து பலத்த காயம் அடைந்தார். அவரை மீட்டு சோளிங்கர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்த நிலையில் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
Next Story

