பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு

X
திண்டுக்கல் மாநகராட்சி 1வது வார்டுக்கு உட்பட்டது பாலத்திருப்பதி பகுதியாகும். பகுதியில் 500 வீடுகளில் 2000க்கும் மேற்பட்டோர் குடும்பங்களாக வசித்து வருகின்றனர். பாலுசாமி சத்திரத்திற்கு பாத்தியப்பட்ட பகுதியில் முந்நூறாண்டுகளுக்கு மேலாக பொதுமக்கள் குடியிருந்து வருகின்றனர். இப்பகுதியில் கழிவுநீர் சாக்கடை குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் எதுவும் இல்லாமல் பொதுமக்கள் சிரமப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் இன்று மாநகராட்சி சார்பில் பொது குடிநீர் குழாய் அமைப்பதற்கு வந்திருந்தனர். அப்போது பால்சாமி சத்திர டிரஸ்டி கணேஷ் பாபு என்பவர் குடிநீர் இணைப்பு வழங்கக் கூடாது பழகினால் இங்கு இருக்கும் வீடுகள் அனைத்தையும் ஜேசிபி எந்திரத்தை வைத்து தரை மட்டம் ஆக்கி விடுவேன் என அப்பகுதி மக்களிடம் மிரட்டியதாகவும் அதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் தாடிக்கொம்பு பிரதான சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். பால்சாமி டிரஸ்ட் நிர்வாகத்தினர் பால திருப்பதி பகுதியில் எந்த ஒரு அடிப்படை வசதியும் செய்ய விடுவதில்லை கழிப்பறை வீடுகளுக்கு மின்சாரம் குடிநீர் வசதி ஆகியவை வழங்கப்படாமல் தடுத்து வருகின்றனர். இதனால் பெண்கள் கழிவறைக்கு கூட செல்வதற்கு சிரமத்திற்கு ஆளாக வேண்டியுள்ளது என்றும் பள்ளி கல்லூரி பயிலும் மாணவர்களுக்கு மின் வசதி இல்லாமல் படிப்பதற்கு சிரமமாக இருப்பதாகவும் தெரிவித்தனர். மேலும் மாவட்ட நிர்வாகம் தலையிட்டு பால திருப்பதி பகுதிக்கு அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும் என கோரிக்கையும் எடுத்துள்ளனர்.
Next Story

