சோளிங்கர் அருகே லாரி கவிழ்ந்து விபத்து

சோளிங்கர் அருகே லாரி கவிழ்ந்து விபத்து
X
சோளிங்கர் அருகே லாரி கவிழ்ந்து விபத்து
அரக்கோணம் அடுத்த கும்பினிபேட்டை பகுதியில் இருந்து சிமெண்டு மூட்டைகளை ஏற்றிக்கொண்டு மினி லாரி ஒன்று சோளிங்கர் ஜம்பக்குளம் கூட்ரோடு வழியாக திருப்பத்தூருக்கு சென்று கொண்டிருந்தது. நீலகண்ட ராயப்பேட்டை அருகே உள்ள தரைப்பாளம் பகுதியில் சென்றபோது எதிரே வந்த வாகனத்திற்கு வழி விடுவதற்காக ஓரமாக சென்றபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த மினி லாரி கால்வாயில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் டிரைவர் கணேசன் (வயது 49) அதிர்ஷ்டவசமாக லேசான காயத்துடன் உயிர் தப்பினார். இது குறித்து சோளிங்கர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story