கிறிஸ்தவ சமூக மக்கள் இயக்கம் மற்றும் தலித் கிறிஸ்தவர் நலச்சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்

X
தலித் கிறிஸ்தவர்களை எஸ்.சி., பட்டியலில் சேர்க்க கோரி மத்திய அரசை வலியுறுத்தி திண்டுக்கல்லில் கிறிஸ்தவ சமூக மக்கள் இயக்கம் மற்றும் தலித் கிறிஸ்தவர் நலச்சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு, திண்டுக்கல் மறை மாவட்ட ஆயர் தாமஸ் பால்சாமி தலைமை வகித்தார். முதன்மை குரு சகாயராஜ் திண்டுக்கல் மறை மாவட்ட பொருளாளர் சாம்சன் ஆரோக்கியதாஸ், முதன்மை செயலாளர் தாமஸ் ஜான் பீட்டர், மதுரை மாவட்ட அதிபர் மரிய இன்னாசி முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில், தலித் கிறிஸ்தவர்களை எஸ்.சி பட்டியலில் சேர்க்க வேண்டும். மிஸ்ரா கமிஷனை அமல்படுத்த வேண்டும். என கோஷங்கள் எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தில் 50க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.
Next Story

