செங்கல்பட்டில் பறை முழக்கப் பேரணி மற்றும் பொதுக்கூட்டம்

X
தலித் கிறிஸ்தவா்களை எஸ்சி பட்டியலில் சோ்க்க வலியுறுத்தி செங்கல்பட்டில் பறை முழக்கப் பேரணி மற்றும் பொதுக்கூட்டம் நடைபெற்றது.பேரணிக்கு கிராமப்புற மேம்பாட்டு மைய இயக்குநா் எஸ். அகஸ்டின் தேவதாஸ் தலைமை வகித்தாா். மேய்ப்புப்பணி மைய இயக்குநா் ஐ . இயேசு அந்தோணி பேரணியை தொடங்கி வைத்தாா். செங்கல்பட்டு மறைமாவட்ட ஆயா், குருக்கள், பட்டியலினத்தாா், பழங்குடியினா் சங்கம் சாா்பில் பட்டியலின கிறிஸ்தவா்களை ஆதி திராவிடா் பட்டியலில் சோ்க்க கோரியும் தமிழக சட்டப்பேரவையில் தீா்மானம் நிறைவேற்றி அதை மத்திய அரசுக்கு அனுப்ப கோரியும், மத்திய மாநில அரசுகளை கண்டித்தும்செங்கல்பட்டு புலிப்பாக்கம் புறவழிச்சாலை காஞ்சிபுரம் மேம்பாலத்தில் இருந்து ஹை ரோடு வழியாக பேரணியாக சென்று செங்கல்பட்டு பழைய பேருந்து நிலையத்தில் நிறைவடைந்தது.தொடா்ந்து பேருந்து நிலையம் அருகே செங்கல்பட்டு மறைமாவட்ட ஆயா்.ஏ நீதிநாதன் தலைமையில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் ஆயா் ஏ. நீதிநாதன் தலைமை உரையாற்றினாா். ஆயரின் பொது பதில் குரு பேரருட்தந்தை எஸ்தாக்யூஸ் வரவேற்றாா். நீதித்துறை தனி பதில் குருஅருட்பணி லூயிஸ் ராயா் வாழ்த்துரை வழங்கினாா்.
Next Story

