திருக்காம்புலியூர்-அதிக பாரம் சுமந்து சென்ற டிராக்டர் கவிழ்ந்து விபத்து.
திருக்காம்புலியூர்-அதிக பாரம் சுமந்து சென்ற டிராக்டர் கவிழ்ந்து விபத்து. கரூர் மாவட்டம் மன்மங்கலம் தாலுக்கா , மின்னாம்பள்ளி ,குடிதெருவை சேர்ந்தவர் மனோகரன் வயது 54. இவர் ஆகஸ்ட் 9ஆம் தேதி மாலை இரண்டு டிப்பர் உடன் கூடிய டிராக்டரை சேலம் - மதுரை சாலையில் ஓட்டி சென்றார். இரண்டு டிப்பரிலும் அதிகப்படியான பாரம் உள்ள விளைபொருட்களை எடுத்துச் சென்றார். இவரது வாகனம் திருக்காம்புலியூர் பகுதிக்கு வந்த போது பாரம் தாங்க முடியாமல் சாலையோரத்தில் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது, இதனைக் கண்ட அப்பகுதியில் உள்ள ஒரு விடுதியில் பணியாற்றும் கண்ணதாசன் வயது 39 என்பவர் அளித்த புகாரின் பேரில்,சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர் , அதிக பாரத்தை சாலை விதிகளுக்கு புறம்பாக ஏற்றி வந்து விபத்து ஏற்பட காரணமான மனோகரன் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர் கரூர் மாநகர காவல் துறையினர்.
Next Story




