அரசு மேல்நிலைப் பள்ளியில் போதைப்பொருள் விழிப்புணர் பேரணி

X
திருப்பத்தூர் மாவட்டம் பெரியகசிநாயக்கன் பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் உலக போதை பொருட்கள் பயன்பாடு தடுப்பு மற்றும் எதிர்ப்பு தின விழிப்புணர்வு பேரணி நிகழ்ச்சி தலைமை ஆசிரியர் தலைமையில் நடைபெற்றது திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி ஒன்றியத்துக்கு உட்பட்ட பெரியகசிநாயக்கன்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில்உலக போதை பொருட்கள் பயன்பாடு தடுப்பு மற்றும் எதிர்ப்பு தின விழிப்புணர்வு பேரணி நிகழ்ச்சி தலைமை ஆசிரியர் குழந்தைசாமி தலைமையில் நடைபெற்றது பள்ளி மாணவ மாணவிகள் பங்கேற்று கையில் பதாகைகள் ஏந்தி அரசு மேல்நிலைப் பள்ளியில் பேரணியாக தொடங்கி பிரதான சாலை வழியாக பள்ளி மாணவி மாணவர்கள் பொதுமக்களுக்கு போதை பொருட்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கையில் பதாகைகள் ஏந்தி வேண்டாம்! வேண்டாம்! போதை வேண்டாம்! போதை மூன்றெழுத்து! உயிர் மூன்றெழுத்து! போதையை ஒழிப்போம் உயிரையை காப்போம்! என கோஷங்கள் எழுப்பி பேரணியாக சென்று மீண்டும் பள்ளியை வந்தடைந்தனர்
Next Story

