மினி பஸ்சை சிறைபிடித்த ஆட்டோ ஓட்டுநர்கள்

காங்கேயம் அருகே மினி பஸ்சை சிறைபிடித்த ஆட்டோ ஓட்டுநர்கள்
படியூர் ஒட்டப்பாளையம் பகுதியில் இருந்து காங்கேயம் பஸ் நிலையம் வழியாக சாம்பவலசு வரை மினி பஸ் இயக்கப்பட்டு வருகிறது. நேற்று முதல் பலமுறை அப்பகுதி உள்ள நிறுவனங்களில் பணியாற்றும் வடமாநிலத்தவர்களுக்காக ஒட்டப்பாளையம் முதல் படியூர் பஸ் நிறுத்தம் வரை மினி பஸ் இயக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து கண்காணித்து வந்த அப்பகுதியை சேர்ந்த ஆட்டோ டிரைவர்கள், படியூர் பஸ் நிலையத்துக்கு பயணிகளை இறக்கிவிட வந்த மினி பஸ்சை சாலையின் குறுக்கே வழிமறித்து சிறைபிடித்தனர். இதனால் பஸ் டிரைவருக்கும், ஆட்டோ டிரைவர்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. மேலும் உரியமுறைப்படி மினி பஸ் இயக்கப் பட வேண்டும் எனவும், இதனால் ஆட்டோ ஓட்டுனர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது என்றும் தெரிவித்தனர்.
Next Story