சாலையில் சாதுவாக வனத்திற்குள் திரும்பிய பாகுபலி !

X
மேட்டுப்பாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உலா வரும் ஒற்றைக்காட்டு யானை ‘பாகுபலி’, நேற்றிரவு மேட்டுப்பாளையம்–ஊட்டி பிரதான சாலையின் முந்திரி முடக்கு பகுதியில் காணப்பட்டது. உணவு, தண்ணீர் தேடி இரவில் விளைநிலங்களுக்கு வரும் பாகுபலி, அப்பகுதி மக்கள் “போப்பா... போ...” என செல்லமாக விரட்டியதும், அமைதியாக வனப்பகுதிக்குள் சென்றது. இதனை பொதுமக்கள் செல்போனில் பதிவு செய்து சமூக வலைதளங்களில் பகிர, வீடியோ வைரலாகி வருகிறது.
Next Story

