கோவையில் வீட்டுச் சுவர் ஏறி திருட முயன்ற வாலிபர் கைது

கோவையில் வீட்டுச் சுவர் ஏறி திருட முயன்ற வாலிபர் கைது
X
கோவையில் வீட்டுச் சுவர் ஏறி திருட முயன்ற வாலிபர் : கண்காணிப்பு கேமரா காட்சிகளை வைத்து மடக்கிப் பிடித்த குடும்பத்தினர்.
கோவை, சூலூர் கண்ணம்பாளையம் லட்சுமி நகர் பகுதியில், வெள்ளிக்கிழமை நள்ளிரவு வீட்டின் காம்பவுண்ட் சுவர் ஏறி குதித்து திருட முயன்ற 27 வயது திபாஸ் சர்தாரை வீட்டின் உரிமையாளர் மோகன் மற்றும் அவரது குடும்பத்தினர் துரத்திப் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். விசாரணையில், குற்றவாளி மேற்கு வங்கத்தைச் சேர்ந்தவர் என்றும், அப்பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருபவர் என்றும் தெரியவந்தது. சூலூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து அவரைக் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
Next Story