சூலூரில் மனித கை பரபரப்பு – நாய் எடுத்துச் சென்ற சிசிடிவி காட்சி வெளியீடு

X
சூலூர் அருகே கள்ளபாளையம் பகுதியில் உள்ள தனியார் நிறுவன வளாகத்தில் மனித வலது கை ஒன்று கிடைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது. விசாரணையில், அது திருப்பூரைச் சேர்ந்த அழகுபாண்டி என்பவருடையது என உறுதி செய்யப்பட்டது. குடும்பத் தகராறால் அவர் தண்டவாளத்தில் தற்கொலைக்கு முயன்றபோது கை துண்டாகியிருந்தது. அந்த கை உயிரியல் மருத்துவக் கழிவு தொழிற்சாலையில் இருந்தபோது, ஒரு நாய் அதை எடுத்துச் சென்று நிறுவனத்திற்குள் போட்டுவிட்டது. நாய் கையை எடுத்துச் செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
Next Story

