அருவாளுடன் சுற்றித்திரிந்த ரவுடி கைது!

X
தூத்துக்குடியில் அரிவாளுடன் சுற்றித்திரிந்த 5 கொலை உட்பட 26 வழக்குகளில் தொடர்புடைய ரவுடி கைது தூத்துக்குடி கிருஷ்ணராஜபுரத்தை சேர்ந்தவர் மோகன் என்ற மோகன்ராஜ் (42) இவர் மீது தூத்துக்குடி வடபாகம்,தென்பாகம், தாளமுத்துநகர்,மற்றும் சிப்காட் ஆகிய காவல் நிலையங்களில் 5 கொலை வழக்குகள் உட்பட மொத்தம் 26 வழக்குகள் உள்ளது. மேலும் இவர் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டு சில மாதங்களுக்கு முன் வெளிவந்த நிலையில் மீண்டும் 2 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு கைதாகி சமீபத்தில்தான் வெளிவந்துள்ளார். இந்நிலையில் அவர் மீண்டும் அரிவாளுடன் சுற்றி தெரிவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது, இந்நிலையில் தூத்துக்குடி வடபாகம் போலீஸார் சுந்தரவேல்புரம் அருகே உள்ள முகமதுசாதலிபுரம் பகுதியில் சாலையில் வந்த அதே பகுதியை சேர்ந்த கூலி தொழிலாளி பாரதிராஜாவை( 46 ) வழிமறித்து அரிவாளைக் காட்டி பணம் கேட்டு மிரட்டி உள்ளார். இந்நிலையில் மோகன்ராஜை தொடர்ந்து கண்காணித்து வந்த வடபாகம் போலீசார் அரிவாளை காட்டி மிரட்டிய புகாரின் பேரில் மீட்டும் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.
Next Story

