சேலத்தில் ஓட்டல் ஊழியரை தாக்கி செல்போன் பறிப்பு

X
சேலம் மாவட்டம் மேட்டுப்பட்டி பகுதியை சேர்ந்தவர் சிவானந்தம் (வயது 40). இவர், கொண்டலாம்பட்டி சூளைமேட்டில் ஒரு ஓட்டலில் ஊழியராக வேலை செய்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு அவர் வேலையை முடித்துவிட்டு மோட்டார் சைக்கிளில் நெய்காரப்பட்டி பெரியகளம் பகுதியில் சென்று கொண்டிருந்தார். அப்போது, அந்த வழியாக வந்த 4 பேர் சிவானந்தத்தை மிரட்டி தாக்கியதேடு அவரது செல்போனை பறித்துக்கொண்டு தப்பி ஓடிவிட்டனர். இதுகுறித்து கொண்டலாம்பட்டி போலீஸ் நிலையத்தில் சிவானந்தம் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில், ஓட்டல் ஊழியரிடம் செல்போனை வழிப்பறி செய்தது, மல்லூர் அம்மாபாளையம் ஏரிக்கரையை சேர்ந்த சதீஷ் (28), சங்ககிரியை சேர்ந்த சபரீசன் (22) மற்றும் 17 வயது மற்றும் 16 வயது இரண்டு சிறுவர்கள் என்பது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 4 பேரையும் கொண்டலாம்பட்டி போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர்களிடம் இருந்து செல்போனை போலீசார் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story

