கரூர்- ஆணவக் கொலைகள் தடுப்பு சிறப்பு சட்டத்தை உடனே இயற்ற வலியுறுத்தி வி.சி.கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்.
கரூர்- ஆணவக் கொலைகள் தடுப்பு சிறப்பு சட்டத்தை உடனே இயற்ற வலியுறுத்தி வி.சி.கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம். கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் ஆணவக் கொலைகள் தடுப்பு சிறப்பு சட்டத்தை தமிழக அரசு உடனே இயற்றிட வலியுறுத்தியும் , தூத்துக்குடி மென்பொறியாளர் கவின் செல்வகணேஷ் உள்ளிட்ட பல இளைஞர்கள் தொடர் ஆவணப்படுகொலைகள் கண்டித்தும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கரூர் மாநகர மாவட்ட செயலாளர் கராத்தே இளங்கோவன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் மேற்கு மாவட்ட செயலாளர் புகழேந்தி,கிழக்கு மாவட்ட செயலாளர் சக்திவேல் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டு ஆணவ படுகொலைகளுக்கு எதிராக கண்டன கோசங்களை எழுப்பினர்.
Next Story





