தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா வருகை ரதயாத்திரை

X
சேலம் மேற்கு மாவட்ட தே.மு.தி.க. செயலாளர் சுரேஷ்பாபு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- 'உள்ளம் தேடி இல்லம் நாடி' என்ற பெயரில் விஜயகாந்த் ரத யாத்திரை நிகழ்ச்சி இன்று (திங்கட்கிழமை) மேட்டூர், கொளத்தூர், மேச்சேரி ஆகிய 3 இடங்களில் நடக்கிறது. அதன்படி மாலை 4 மணிக்கு மேட்டூர் மாதா கோவில் முன்பு ரதயாத்திரை தொடங்கி ஸ்கொயர் மார்க்கெட்டில் முடிவடைகிறது. பின்னர் மாலை 5.30 மணிக்கு கொளத்தூர் பஸ் நிலையம் அருகிலும், இரவு 7 மணிக்கு மேச்சேரி பஸ் நிலையம் அருகிலும் இந்த ரதயாத்திரை நடக்கிறது. இந்த நிகழ்ச்சிகளில் தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், மாநில அவைத்தலைவர் இளங்கோவன், மாநில கொள்கை பரப்பு செயலாளர் அழகாபுரம் மோகன்ராஜ், மாநில இளைஞர் அணி செயலாளர் விஜய்பிரபாகர் ஆகியோர் கலந்து கொண்டு பேசுகின்றனர். இந்த ரத யாத்திரை நிகழ்ச்சிகளில் சேலம் மாவட்டத்தில் இருந்து கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் திரளாக கலந்து கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.
Next Story

