போதைப் பொருள்களுக்கு எதிரான விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி

போதைப் பொருள்களுக்கு எதிரான விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி
X
போதைப் பொருள்களுக்கு எதிரான விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி
செங்கல்பட்டு, வித்யாசாகர் கல்லூரியில் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை சார்பில் போதைப் பொருள்களுக்கு எதிரான விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. தமிழ்நாடு துணை முதலமைச்சர் உடன் பள்ளி,கல்லூரி மாணவர்கள், காணொளி காட்சியின் வாயிலாக போதைப் பொருட்களுக்கு எதிரான உறுதிமொழி ஏற்றனர். அதனைத் தொடர்ந்து குறு,சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், பல்லாவரம் சட்டமன்ற உறுப்பினர் இ.கருணாநிதி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சாய் பிரனீத், செங்கல்பட்டு சட்டமன்ற உறுப்பினர் வரலட்சுமி மதுசூதனன்,காட்டாங்கொளத்தூர் மத்திய ஒன்றிய செயலாளர் கே.பி.இராஜன்,தெற்கு ஒன்றிய செயலாளர் ஆப்பூர் சந்தானம், அவைத்தலைவர் வி.ஜி.திருமலை, செங்கல்பட்டு நகர கழக செயலாளர் நரேந்திரன்,மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கற்பகம்,கலால் உதவி ஆணையர் இராஜன்பாபு மற்றும் அரசு அதிகாரிகள், காவல்துறை அதிகாரிகள், ஆசிரியர் மற்றும் பள்ளி கல்லூரி மாணவர்கள் என அனைவரும் போதைக்கு எதிரான விழிப்புணர்வு உறுதிமொழி எற்றனர். இதனைத்தொடர்ந்து , மாவட்ட அளவில் சிறப்பான முறையில் போதைப் பொருட்களுக்கு எதிராக விழிப்புணர்வு செய்த பள்ளி மற்றும் கல்லூரியைச் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு , பாராட்டு சான்றிதழ்கள் மற்றும் பரிசுத்தொகை கள் வழங்கப்பட்டது.
Next Story