ஹூப்பள்ளி - காரைக்குடி கரூர் வழியாக சிறப்பு ரயில் இயக்கம்.சேலம் தெற்கு கோட்ட மக்கள் தொடர்பு அலுவலர் அறிவிப்பு.
ஹூப்பள்ளி - காரைக்குடி கரூர் வழியாக சிறப்பு ரயில் இயக்கம்.சேலம் தெற்கு கோட்ட மக்கள் தொடர்பு அலுவலர் அறிவிப்பு. அதிகரித்து வரும் பயணிகளின் எண்ணிக்கையை கருத்தில் கொண்டு, ஹூப்பள்ளி (கர்நாடகா) - காரைக்குடி இடையே சேலம், நாமக்கல், கரூர், திருச்சிராப்பள்ளி வழியாக சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என கரூர் மாவட்டம் உள்ளடக்கிய சேலம் தெற்கு ரயில்வே கோட்ட மக்கள் தொடர்பு அலுவலர் மரியா மைக்கேல் அறிவிப்பு.இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், ரயில் எண்.07331 ஹூப்பள்ளி - காரைக்குடி சிறப்பு ரயில் 14.08.25 அன்று மாலை 16.00 மணிக்கு ஹூப்பள்ளியிலிருந்து புறப்பட்டு காரைக்குடியை மறுநாள் காலை11.00 மணிக்கு சென்றடையும். ரயில் எண் :07332 -காரைக்குடி ஹூப்பள்ளி சிறப்பு ரயில் 15.08.25 அன்று மாலை 6.45 மணிக்கு காரைக்குடியில் இருந்து புறப்பட்டு மறுநாள் பிற்பகல் 2.40 மணிக்கு ஹூப்பள்ளியை அடையும். இந்த ரயிலில் ஏசி 2-அடுக்கு, ஏசி 3-அடுக்கு, ஸ்லீப்பர் வகுப்பு, பொது இரண்டாம் வகுப்பு & லக்கேஜ்-கம்-பிரேக் வேன் பெட்டிகள் இணைக்கப்பட்டு இருக்கும். மேலும் ஹாவேரி, ஹரிஹர், தாவணகெரே, பிரூர், அரசிகெரே, தும்கூர், சிக்க பனாவரா, SMVT பெங்களூரு, கிருஷ்ணராஜபுரம், பங்காரப்பேட்டை, சேலம், நாமக்கல், கரூர், திருச்சிராப்பள்ளி ஜே.என் மற்றும் புதுக்கோட்டை ரயில் நிலையங்களில் நின்று செல்லும் என அந்த செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Next Story




