ராமநாதபுரம் திமுக பிரமுகர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு

வழுதூர் திருவிழாவில் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக திமுக பிரமுகர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு பரபரப்பு
ராமநாதபுரம் அடுத்த வழுதூர் கிராமத்தில் உள்ள ஸ்ரீமாரியம்மன் கோவிலில் கடந்த 5ந்தேதி நடைபெற்ற முளைப்பாரி திருவிழாவில் பாரி எடுத்து கொடுக்கும் நிகழ்வில் பெயர் மாறிவிட்டதாக எதிர்ப்பு தெரிவித்தது தொடர்பாக கிராம நிர்வாகிகளிடம் ரஞ்சித் என்பவர் பிரச்சனை செய்துள்ளார் இது தொடர்பாக ஏற்பட்ட முன் பகையின் காரணமாக திமுக தகவல் தொழில்நுட்ப அணி மண்டபம் ஒன்றிய அமைப்பாளர் கௌதம் என்பவரின் வீட்டில் பெட்ரோல் கொண்டு வீசியும் கற்கள் வைத்து வீசியதில் ஜன்னல்கள் உடைக்கப்பட்டது சோபா செட் இருசக்கர வாகனம் மீட்டர் பாக்ஸ் உள்ளிட்ட பல்வேறு விலை உயர்ந்த பொருட்கள் சேதம் அடைந்தது இந்தப் பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவத்தில் தொடர்புடைய பிரபு (35), அலெக்ஸ் (36) ரஞ்சித் 26 உள்ளிட்ட 5 நபர்கள் கௌதம் என்பவரின் வீட்டிற்கு சென்று வீட்டில் இருந்தவர்களை மிரட்டியும், கற்களை எரிந்து வீட்டின் கண்ணாடி ,இரு சக்கர வாகனம் சேதப்படுத்தி சென்றுள்ளனர். இதேபோல சௌந்தர் என்பவரின் வீட்டிலும் பெட்ரோல் குண்டு வீசப்பட்டுள்ளது தொடர்ச்சியாக அடுத்தடுத்து இரண்டு வீடுகளில் பெட்ரோல் குண்டு வீசிய சம்பவம் அதிர்ச்சி அடைய செய்துள்ளது இது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது தகவலறிந்த கேணிக்கரை காவல்துறை ஆய்வாளர் ஆறுமுகம் மற்றும் போலீசார் ச‌‌ம்பவ இடத்தில் விசாரணை செய்து இந்தச் சம்பவத்தில் தொடர்புடைய நபர்களை மண்டபம் பாம்பன் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு சென்று தேடி வருகின்றனர் வழுதூர் பகுதியில் பெட்ரோல் கொண்டு வீச்சு சம்பவத்தால் அப்பகுதி பொதுமக்கள் அச்சமடைந்தனர் வெகு விமர்சியாக கொண்டாடப்பட்ட முளைக் கொட்டு திருவிழாவில் கிராம முக்கிய பிரமுகர்களிடம் கடும் வாக்குவாதத்திலும் ஈடுபட்டு பொது இடத்தில் அநாகரிகமாக பேசி பெட்ரோல் குண்டு வீசிய சம்பவத்தில் ஈடுபட்டவர்களை உடனடியாக கைது செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்
Next Story