கரூரில் தெருநாய்கள் கடித்ததில் எட்டு ஆடுகள் உயிரிழப்பு- கால்நடைத்துறை அதிகாரிகள் நேரில் ஆய்வு.
கரூரில் தெருநாய்கள் கடித்ததில் எட்டு ஆடுகள் உயிரிழப்பு- கால்நடைத்துறை அதிகாரிகள் நேரில் ஆய்வு. கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட தாந்தோணிமலை, வடக்கு தெருவை சேர்ந்தவர் அமுதா. இவரது கணவர் பழனியப்பன். மாற்றுத் திறனாளியான இவர் உடல்நிலை சரியில்லாமல் வீட்டிலேயே வசித்து வருகிறார். இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். குடும்ப செலவுகளுக்கும், பொருளாதார தேவைக்காக வீட்டுக்கு அருகில் ஆட்டுப்பட்டி அமைத்து அமுதா பராமரித்து வருகிறார். இந்த நிலையில் நேற்று இரவு ஆடுகள் கட்டப்பட்டிருந்த இடத்தில், தெரு நாய்கள் உள்ளே சென்று ஆடுகளை கடித்து சேதப்படுத்தியதாக கூறப்படுகிறது. நாய்கள் கடித்ததில் பாதிப்புக்குள்ளாகி 8 ஆடுகள் உயிரிழந்தன. இதில் நான்கு சினை ஆடுகளும், அதில் ஒரு ஆடு 2 குட்டிகளும் அண்மையில் ஈன்றுள்ளது. இது குறித்து தகவலறிந்த கால்நடை துறை அதிகாரிகள் மற்றும் கால்நடை மருத்துவர் சம்பவ இடத்திற்கு வந்து ஆய்வு செய்தனர்.
Next Story




