ராமநாதபுரம் வீணாகப் போகும் காவிரி கூட்டு குடிநீர்

நதி பாலம் பகுதியில் காவிரி கூட்டு குடிநீர் குழாய் உடைந்து இரண்டு மாதமாக சாலையில் தண்ணீர் தேங்கி வரும் அவலம் நடவடிக்கை எடுக்க கோரிக்கை
ராமநாதபுரம் மாவட்டம் அருகே உள்ளது நதிப்பாலம் பகுதி இங்கு அழகன்குளம் ஆற்றங்கரை பனைக்குளம் சித்தார் கோட்டை வழுதூர் வாலாந்தரவை பெருங்குளம் உடைச்சியார்வலசை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் பேருந்துக்காக இந்த நதிப்பாலம் சந்திப்பு சாலையில் காத்திருந்து பேருந்துக்கு சென்று வருகின்றனர் இந்த நிலையில் காவிரி கூட்டு குடிநீர் குழாய் உடைந்து இரண்டு மாதமாக சாலையில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது அதிகாரியிடம் பலமுறை தகவல் தெரிவித்தும் எந்த விதமான நடவடிக்கையும் எடுக்காததால் பொதுமக்களுக்கு கிடைக்க வேண்டிய குடிநீர் சாலையில் வீணாக தேங்கி சுகாதார சீர்கேடு ஏற்படுத்தி வருகிறது இது பற்றி மதிப்பாலம் பகுதியில் டீக்கடை வைத்திருக்கும் ரவி என்பவர் கூறுகையில் இரண்டு மாத காலமாக கூட்டுக் குடிநீர் குழாய் உடைந்து சாலையில் தண்ணீர் தேங்குகிறது இது குறித்து அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தும் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை சாலையில் தண்ணீர் தேங்குவதால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது ஒரே இடத்தில் இரண்டு மாதமாக தண்ணீர் தேங்குவதால் ஈ, கொசு , நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது கூட்டுக் குடிநீர் அதிகாரிகளும் சுகாதாரத்துறை அதிகாரிகளும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தார்
Next Story