விடுதி உரிமையாளரை வெட்டிய வழக்கில் வாலிபர் கைது!

விடுதி உரிமையாளரை வெட்டிய வழக்கில் வாலிபர் கைது!
X
தூத்துக்குடியில் விடுதி உரிமையாளரை வெட்டிய வழக்கில் வாலிபர் கைது!
தூத்துக்குடியில், புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள ஒரு தனியார் விடுதியில் லூர்தம்மாள்புரத்தைச் சேர்ந்த மாரிமுத்து மனைவி பார்வதி (44) என்பவர் துப்புரவு பணியாளராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் நேற்று பார்வதியின் மகனான செல்வகுமார் (19), தனது நண்பர் ஒருவருடன் விடுதிக்கு சென்று தனது தாயிடம் மது அருந்த பணம் கேட்டு தகராறு செய்து அரிவாளால் தாக்கியுள்ளனர். அப்போது அங்கு இருந்த விடுதியின் உரிமையாளரான போல்பேட்டை பகுதியைச் சேர்ந்த வேல்முருகன் மகன் முருகானந்தன் (69) என்பவர் அதனை தட்டிக் கேட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த செல்வகுமார் மற்றும் அவரது நண்பர் ஆகிய இருவரும் சேர்ந்து முருகானந்தத்தையும் அரிவாளால் தாக்கி தப்பிச் சென்றுள்ளனர்.  இதுகுறித்து வடபாகம் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு கதிரவனை கைது செய்தனர். தலைமறைவான அவரது நண்பரான தேவர்புரம் பகுதியைச் சேர்ந்த கணேசன் மகன் கதிரவன் (22) என்பவரை தேடி வருகின்றனர்.
Next Story