மீனவர்களுக்கு பரிசல்கள் மற்றும் மீன் குஞ்சுகள் வழங்கல்

மீனவர்களுக்கு பரிசல்கள்  மற்றும் மீன் குஞ்சுகள் வழங்கல்
X
மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை சார்பில் மீனவர்களுக்கு பரிசல்கள் மற்றும் மீன் குஞ்சுகளை வழங்கிய மாவட்ட ஆட்சியர்
திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று (11.08.2025) நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் சரவணன் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை சார்பில் 2024-2025 ஆம் ஆண்டு மீன்வளம், மீனவர் நலத்துறை மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அவர்களால் சட்டமன்ற கூட்டத்தொடரில் அறிவிக்கப்பட்ட உள்நாட்டு மீனவர்களுக்கு 50% மானியத்தில் மீன்பிடி உபகரணங்கள் வழங்குதல் திட்டத்தில் திண்டுக்கல் மாவட்டத்தில் 10 மீனவர்களுக்கு மீன்பிடி பரிசல்கள் வழங்கினார். மேலும் 2025-26 ஆம் ஆண்டிற்கு மீன்வக்ஷளம், மீனவர் நலத்துறை மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அவர்களால் சட்டமன்ற கூட்டத்தொடரில் அறிவிக்கப்பட்ட மாவட்ட மீன்வளர்ப்போர் மேம்பாட்டு முகமை உறுப்பினர்களுக்கு 50 இலட்சம் ரூபாய் மீன்வளர்ப்பு உள்ளீட்டு மானியமாக வழங்குதல் திட்டத்தில் திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த 8 பயனாளிகளுக்கு 5.15 ha அளவில் இருப்பு செய்திட மீன்குஞ்சுகளை மாவட்ட ஆட்சியர் சரவணன் வழங்கினார். இந்நிகழ்வில் ஏ.டி கொளஞ்சிநாதன், டி.டி சின்னக்குப்பன் மற்றும் மீன்வளத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
Next Story