காங்கேயம் சட்டமன்ற தொகுதி அதிமுக நிர்வாகிகளுக்கு புதிய பதவி
திருப்பூர் மாவட்ட காங்கேயம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட காங்கேயம்,வெள்ளகோவில்,சென்னிமலை பகுதிகளை சேர்ந்த அதிமுக நிர்வாகிகளுக்கு இன்று அதிமுக தலைமை கழகம் புதிய பதவிகளை வழங்கியது. வெள்ளகோவில் ஒன்றிய செயலாளராக விஸ்வேஸ்வரன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இவர் முன்னாள் அமைச்சர் துரை ராமசாமியின் பேரன் ஆவர் இவரின் தந்தை வெங்கடேஸ்வரன் சுதர்சன் வெள்ளகோவில் முன்னாள் யூனியன் சேர்மனாக இருந்துள்ளார். பாட்டி விசாலாட்சி மேட்டுப்பாளையம் ஊராட்சி தலைவராக கடந்த முறை பதவி வகித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இளைஞர் ஒருவரை வெள்ளகோவில் ஒன்றிய செயலாளராக பதவி வழங்கியது இளைஞர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியதாக அதிமுக நிர்வாகிகள் தெரிவிக்கின்றனர். இதே போல மாவட்ட புரட்சி தலைவி அம்மா பேரவை துணை செயலாளராக NSN தனபால்,காங்கேயம் ஒன்றிய இளைஞர் இளம் பெண்கள் பாசறை செயலாளராக கெளதம், காங்கேயம் ஒன்றிய மாணவரணி செயலாளராக லோகேஸ்வரன், வெள்ளகோவில் ஒன்றிய தகவல் தொழில்நுட்ப அணி செயலாளராக தனசேகரன், காங்கேயம் நகர தகவல் தொழில்நுட்ப அணி செயலாளராக ரகுபதி , காங்கேயம் ஒன்றிய தகவல் தொழில்நுட்ப அணி செயலாளராக நிதிஷ் ஆகியோரை நியமிக்கப்பட்டுள்ளனர். புதிய பதவி வழங்கப்பட்ட நிர்வாகிகள் மாவட்ட நிர்வாகிகள் மற்றும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர், அதிமுக கட்சியின் மூத்த நிர்வாகிகளை மாறியதை நிமித்தமாக சந்தித்து வாழ்த்து பெற்று செல்கின்றனர்.
Next Story












