அரியலூரில் போதைப் பொருள்கள் இல்லாத தமிழ்நாடு உறுதிமொழி ஏற்பு

அரியலூரில் போதைப் பொருள்கள் இல்லாத தமிழ்நாடு உறுதிமொழி ஏற்பு
X
அரியலூரில் போதைப்பொருள்கள் இல்லாத தமிழ்நாடு விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சியர் பொ.ரத்தினசாமி.கொடியசைத்து தொடக்கி வைத்தார்.
அரியலூர், ஆக.11: சென்னை நந்தனம் அரசு கலைக் கல்லூரி வளாகத்தில், தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்ற போதைப் பொருள்கள் இல்லாத தமிழ்நாடு உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி காணொலி காட்சி வாயிலாக அரியலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அனிதா அரங்கில், ஒளிபரப்பு செய்யப்பட்டது.இதனையடுத்து மாவட்ட ஆட்சியர் பொ.ரத்தினசாமி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஷ்வேஷ் பா.சாஸ்திரி, மாவட்ட வருவாய் அலுவலர் க.ரா.மல்லிகா, அரியலூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை முதன்மையர் முத்துகிருஷ்ணன், மாவட்ட  கூடுதல் காவல் கண்காணிப்பாளர் முத்தமிழ்செல்வன்,உடையார்பாளையம் கோட்டாட்சியர் ஷீஜா,  மாவட்ட முதன்மைக் கல்வி  அலுவலர்(பொ)பாலசுப்ரமணியன், நகர்மன்றத் தலைவர் சாந்தி கலைவாணன் மற்றும் அனைத்துத் துறை அலுவலர்கள்,  பள்ளி, கல்லூரி மாணவ,மாணவிகள் உள்ளிட்டோர் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.தொடர்ந்து போதைப் பொருட்கள் இல்லாத தமிழ்நாடு கையெழுத்து பிரச்சாரத்தினை, ஆட்சியர் கையெழுத்திட்டு  தொடக்கி  வைத்தார். இப்பேரணியில் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் 800  பேர் கலந்து கொண்டு போதைப்பொருள்கள் பழக்கத்துக்கு எதிரான விழிப்புணர்வு வாசகங்களை ஏந்தி, முழக்கமிட்டவாறு சென்றனர். :
Next Story