மாணவர்களுக்கு இயற்கை விவசாய விழிப்புணர்வு கல்வி சுற்றுலா.

X
Paramathi Velur King 24x7 |11 Aug 2025 6:30 PM ISTகபிலர்மலை அரசு பள்ளி மாணவர்களுக்கு இயற்கை விவசாய விழிப்புணர்வு கல்வி சுற்றுலா.
பரமத்திவேலூர், ஆக.11: பரமத்திவேலூர் தாலுகா கபிலர்மலை வட்டார வேளாண்மைத்துறை வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை மற்றும் அட்மா திட்டத்தின் கீழ் கபிலர்மலை அரசினர் மேல்நிலைப்பள்ளியில் பயிலும் 11 மற்றும் 12-ம் வகுப்பு மாணவ-மாணவிகள் இயற்கை விவசாயம் குறித்த கல்வி சுற்றுலாவிற்கு அழைத்து செல்லப்பட்டனர். மாணவ-மாணவிகளுக்கு இயற்கை விவசாயம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பட்டறிவு பயணத்தில் திருப்பூர் மாவட்டம், கொல்லப்பட்டி கிராமம் பகுதியில் இயற்கை விவசாயம் செய்து வரும் முன்னோடி இயற்கை விவசாயி மணியின் தோட்டத்துக்கு அழைத்து செல்லப்பட்டனர். அங்கு மண்ணை வளப்படுத்த பலதானிய விதைப்பு, களைகளை மடக்கி உழுது உரமாக்கி மண்ணுக்கு சத்துக்களை அளிப்பது, பேரூட்டங்கள் மற்றும் நுண்ணூட்டங்களை பயிர்களுக்கு அளிப்பதற்கு தோட்டத்தில் செயல்படும் இயற்கை உர தயாரிப்பு அமைப்புகள், பயிர்களின் வளர்ச்சியை பாதிக்கும் பூச்சி மற்றும் நோய் தாக்குதல்களை முன்கூட்டியே தடுப்பது, நாட்டு மாட்டு சாணத்தில் இருந்து நந்து சான்ப்பாசி கரைசல் தயாரித்து மண்வளத்தை மேம்படுத்துவது, மீன் அமிலக்கரைசல் மற்றும் பஞ்சகாவ்யம் தயாரித்து பயிர்களுக்கு அளிப்பது உள்ளிட்ட பல்வேறு இயற்கை விவசாய செயல்முறைகள் மாணவ-மாணவியருக்கு விளக்கி விழிப்புணர்வு ணர்வு ஏற்படுத்தப்பட்டது. கல்வி சுற்றுலாவுக்கான ஏற்பாடுகளை கபிலர்மலை வட்டார வேளாண்மை துணை அலுவலர் மற்றும் அட்மா திட்ட அலுவலர்கள் செய்திருந்தனர். இதில் கபிலர்மலை அரசினர் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பூவராகவன், உதவி தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரிய, ஆசிரியைகள் உடன் சென்று இருந்தனர்.
Next Story
