சிக்னல் இருந்தும் தாறுமாறாக செல்லும் வாகனங்கள்

சிக்னல் இருந்தும் தாறுமாறாக செல்லும் வாகனங்கள்
X
குமாரபாளையத்தில் சிக்னல் இருந்தும் தாறுமாறாக செல்லும் வாகனங்களால் பொதுமக்கள் பெரிதும் சிரமத்திற்கு ஆளாகிறார்கள்.
குமாரபாளையம் சேலம் சாலை பள்ளிபாளையம் பிரிவு, ஆனங்கூர் பிரிவு, கத்தேரி பிரிவு ஆகிய பகுதியில் வாகனங்கள் அதிகளவில் சென்று வருகின்றன. இதில் பள்ளிபாளையம் பிரிவு சாலை பகுதியில் சிக்னல் அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் அங்குள்ள நான்கு சாலைகளில் அவ்வழியாக செல்லும் வாகனங்கள் தாறுமாறாக செல்கின்றன. இதனால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். இதனால் அடிக்கடி விபத்துக்கள் ஏற்பட்டு பலரும் பாதிப்புக்கு ஆளாகி வருகிறார்கள். அடிக்கடி விபத்துக்கள் ஏற்பட்டு வருகிறது என்பதால்தான் இங்கு பல வருட கோரிக்கைக்கு பிறகு, சமீபத்தில் இந்த சிக்னல் அமைக்கப்பட்டது. ஆனால் சிக்னல் அமைக்தும் எவ்வித பலனும் இல்லாமல், விபத்துக்கள் தொடர்ந்து ஏற்பட்டு, பொதுமக்கள் பாதிக்கப்படுவதும் தொடர்ந்து வருகிறது. இந்த சிக்னலால் யாருக்கும் எவ்வித பலனும் இல்லை. இதனை செயல்பட வைத்து, விபத்துக்கள் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
Next Story