பாஜக சார்பாக தேசியக்கொடி ஏந்தி ஊர்வலம்

X
குமரி மாவட்ட பாஜக மேல்புறம் தெற்கு ஒன்றியத்தின் சார்பாக நடைபெற்ற தேசியக்கொடி ஏந்தி செல்லும் நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்ச்சிக்கு மேற்புறம் தெற்கு ஒன்றிய தலைவர் சரவணவாஸ் நாராயணன் தலைமை வகித்தார். ஒன்றிய செயலாளர் ராசேத்திர பிரசாத் வரவேற்றார் மேல்புறம் வடக்கு ஒன்றிய தலைவர் சதீஷ் சந்திரன், மாவட்ட பிரச்சார பிரிவு செயலாளர் சுஜித் பாபு உள்ளிட்டோர் யேசினர். கழுவன் திட்டை சந்திப்பில் இருந்து தேசிய கொடி ஏந்திய பேரணியானது துவங்கி வட்ட விளை, வழியாக மேல்புறம் சந்திப்பில் நிறைவடைந்தது. இந்த பேரணியில் மண்டல் பொதுச் செயலாளர் சுரேஷ் குமார், பொருளாளர் கங்காதரன், துணைத் தலைவர்கள் திலீப் குமார், ராஜேஷ், ஜெயனேந்திரகுமார், மோகன் தேவ், ஒன்றிய செயலாளர்கள் ஐயப்பன், லதா,ஒன்றிய, கிளை,சக்தி கேந்திர பொறுப்பாளர்கள், நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
Next Story

