எல்லை போராட்ட துப்பாக்கி சூடு நினைவு தினம்

X
குமரி மாவட்டம், திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் ஆட்சியில் மலையாள ஆதிக்கத்தின் பிடியில் இருந்த தமிழர் பகுதிகளை மீட்க தமிழர்கள் குமரித்தந்தை மார்சல் நேசமணி தலைமையில் முன்னெடுத்தனர். அப்போராட்டத்தை அடக்கி ஒடுக்க மலையாள இனவெறி அரசு பலவிதமான அடக்குமுறை ஒடுக்குமுறைகளை ஏவியது. அந்த ஒடுக்குமுறையின் ஒரு பகுதியாக 1954-ம் ஆண்டு ஆகஸ்ட் 11-ம் தேதி மார்த்தாண்டம் மற்றும் புதுக்கடை பகுதிகளில் தமிழர்கள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. இந்த துப்பாக்கி சூட்டில் மங்காடு தேவசகாயம்,கீழ்குளம் செல்லையன், மார்த்தாண்டம் பப்பு பணிக்கர், நட்டாலம் இராமையன் நாடார், புதுக்கடை அருளப்பன் நாடார், கிள்ளியூர் முத்துசுவாமி, தோட்டவரம் குமரன் நாடார், புதுக்கடை செல்லப்பாபிள்ளை, தேங்காப்பட்டணம் பீர்முகமது, கோட்டவிளை பொன்னையன் நாடார், பாலையன் நாடார் ஆகியோர் தங்களது இரத்தத்தை சிந்தி வீரமரணமடைந்தனர். இந்த துப்பாக்கிச்சூட்டின் நினைவு தினமான இன்று எல்லைகாக்க உயிர்நீத்த தியாகிகளுக்கு நாம் தமிழர் கட்சியின் சார்பாக புதுக்கடை மற்றும் மங்காடு பகுதிகளில் அமைந்துள்ள நினைவு ஸ்தூபியில் வீரவணக்கம் செலுத்தப்பட்டது. இதில் ஏராாம் பேர் கலந்து கொண்டனர்.
Next Story

