இளைஞர்கள் போதையில் கலாட்டா பொதுமக்கள் அச்சம்

X
Komarapalayam King 24x7 |11 Aug 2025 7:04 PM ISTகுமாரபாளையம் அருகே மேம்பாலம் பகுதியில் குடிபோதையில் இளைஞர்கள் இரவில் கலாட்டா செய்வதால், பொதுமக்கள் அச்சம் கொண்டுள்ளனர்.
ஞாயிற்றுக்கிழமை என்றால், பல இடங்களில் அடிதடி, போதையில் கலாட்டா, சூதாட்டம் என்பது போன்ற சட்ட விரோத நடவடிக்கைகள் நடப்பது வழக்கம். போலீசார் வழக்கம் போல் இல்லாமல், தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வரும் நிலை ஏற்படும். நேற்று இரவு 08:30 மணியளவில் குமாரபாளையம் அருகே, வளையக்காரனூர் பகுதியில் உள்ள மேம்பாலம் கீழ் பகுதியில், சுமார் 15க்கும் மேற்பட்ட இளைஞர்கள் போதையில் பாட்டு பாடியபடி ஆடிக்கொண்டு இருந்தனர். இதனால் அவ்வழியாக பெண்கள் உள்ளிட்ட பொதுமக்கள் செல்ல அச்சம் கொண்டனர். இது அடிக்கடி பல சம்பவங்கள் நடப்பதால் அந்த மேம்பாலம் பகுதியில் செல்ல பொதுமக்கள் அச்சம் கொண்டு உள்ளனர். இது போன்ற இடங்களில் போதிய ரோந்து பணிகளை செய்து, உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Next Story
